Siragadikka Aasai: "சீரியல் விட்டுட்டு வந்தாதான் பட வாய்ப்பு கிடைக்கும்னா" - San...
மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!
மாளவிகா மோகனன் பிறந்த நாளில் மூன்று திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
நடிகை மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக வலம் வருபவர் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.
இன்று, தன் 32-வது பிறந்த நாளைக் கொண்டாடும் மாளவிகா மோகனனிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாளவிகா மோகனனின் நடிப்பில் அடுத்தடுத்த வெளியாகவுள்ள ஹிருதயப்பூர்வம், ராஜாசாப், சர்தார் - 2 ஆகிய படங்களின் மாளவிக்காவுக்கான போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் நடித்து முடித்து அப்படங்களின் வருகைக்காக காத்திருக்கும் மாளவிகாவுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்க: ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!