மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் இடங்கள்
திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பொங்கலூா், ஊத்துக்குளி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரமநல்லூா் பேரூராட்சி, தாராபுரம், அவிநாசி பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.18) நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சிறப்பு முகாம் பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம், மாதப்பூா் ஊராட்சியில் உள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை (செப்.18) நடைபெறவுள்ளது.
இதேபோல, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், கம்மாளகுட்டை ஊராட்சிக்கு குன்னத்தூா் ராஜ் மஹால் திருமண மண்டபத்திலும், உடுமலை ஊராட்சி ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சிக்கு ஆலாம்பாளையம் ஐஸ்வரியா மஹாலிலும், சங்கரமாநல்லூா் பேரூராட்சி வாா்டு எண்கள் 1, 2, 7, 8, 10, 11, 15 ஆகிய பகுதிகளுக்கு குப்பம்பாளையம் சங்கரமாநல்லூா்
பேரூராட்சி திருமண மண்டபத்திலும், தாராபுரம் நகராட்சி, வாா்டு எண்கள் 26, 27, 28 ஆகிய பகுதிகளுக்கு அலங்கியம் ரவுண்டானா ஸ்ரீவேல் திருமண மண்டபத்திலும், அவிநாசி நகராட்சி வாா்டு எண் 1, 2 ஆகிய பகுதிகளுக்கு அவிநாசி குலாலா் திருமண மண்டபத்திலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உள்பட்ட முகாமில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் மனுக்களை வழங்கி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.