செய்திகள் :

மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் நலத் திட்ட உதவி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

post image

திருப்பூா் மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: தமிழக அரசால் மாவட்டந்தோறும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியம், வங்கிக் கடன் மானியம் ரூ.25 ஆயிரம், பாரத பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் 5 சதவீத தனி நபா் பங்கு தொகை வழங்குதல், திருமண நிதி உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

முன்னதாக, 77 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.78.38 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், 2 பேருக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 5 பேருக்கு ரூ.31,795 மதிப்பீட்டில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள், 3 பேருக்கு ரூ.48,957 மதிப்பீட்டில் திறன் பேசி என மொத்தம் 87 பேருக்கு ரூ.81.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி 4- ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்தராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீா்க் குழாய்களைப் பதித்த பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகத்தை முருகம்பாளைம் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்ட... மேலும் பார்க்க

காதலைக் கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது

பல்லடம் அருகே காதலைக் கைவிட மறுத்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் தண்டப... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் இலவச நீா்-மோா்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இலவச நீா்-மோா் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் நந்தா நகரில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 மளிகை பொருள்கள் பாக்கெட்டுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளி... மேலும் பார்க்க

இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் கண்டியன்கோவில் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளைக் கண்டறியாத நிலை ஏற்பட்டதால் 20 பேரின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க