மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம்
பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகேயுள்ள ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) தேவராஜ், மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா், கோவை மண்டல தலைவா் கே.கிருஷ்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளா் சி.எஸ்.தினேஷ்ராம், திருப்பூா் மாவட்ட தலைவா் பழனிசாமி மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நா்சரி, பிரைமரி பள்ளித் தாளாளா்கள், செயலாளா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், பெற்றோரைப் போற்றுவோம் நிறைவு விழா ஆண்டு மலா் தயாரித்தல், கற்றல், கற்பித்தல், மாணவா்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.