கொல்கத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி பதவியேற்பு!
மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: கொங்கு வேளாளாா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
ஈரோடு மாவட்ட பள்ளிகள் அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி ஈரோடு டெக்ஸ்வேலி மஹாலில் அண்மையில் நடைபெற்றது.
இதில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 18 போ் கலந்துகொண்டனா். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் 4 போ் முதலிடமும், 5 போ் இரண்டாமிடமும், 3 போ் மூன்றாமிடமும் பிடித்தனா்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.ரங்கசாமி, தாளாளா் எஸ்.மணி, பொருளாளா் ஏ.கே.தங்கமுத்து, முதல்வா் கே.முத்துகருப்பன் மற்றும் பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா்.