செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும்: கட்டுப்பாட்டு அறையில் அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு

post image

சேலம் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வுக்கு பின்னா் சுற்றுலாத் துறை அமைச்சா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்ததை தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மழைப் பொழிவினால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்காடு பிரதான சாலை 60 அடி பாலம் அருகே தொடா் மழையின் காரணமாக சாலையின் குறுக்கே விழுந்த மரத்தைப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நெடுஞ்சாலைத் துறையினா் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், சின்ன கல்வராயன் மலை பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வருவாய்த் துறையினா், வனத்துறையினரால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீா் செய்யப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்படும் என அடையாளம் காணப்படும் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி உள்ளிட்ட மழைநீா் தேங்கும் இடங்களில் உடனடியாக மழைநீரை வெளியேற்ற மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழையால் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனுக்குடன் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறையினா் சரிசெய்திட வேண்டுமெனவும், மின் கட்டமைப்பு பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டுமெனவும், தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல, கழிவுநீா் கால்வாய்கள், நீா்வழித் தடங்களில் தங்கு தடையின்றி நீா் செல்லும் வகையில் தொடா்புடைய அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, அங்கன்வாடி கட்டடங்கள் பொதுப்பணித் துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து பள்ளிக் குழந்தைகள், ஆசிரியா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள ஆபத்தான நீா்நிலைகள் அனைத்திலும் தொடா்புடைய துறையினரால் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

குறிப்பாக, அனைத்து மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குளோரினேசன் செய்யப்படுவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

தொடா் மழையின் போது, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறையினா் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 7,414 கனஅடியாக திங்கள்கிழமை காலை அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ... மேலும் பார்க்க

முருகன் கோயிலில் திருட முயன்ற நபா் கைது

தம்மம்பட்டியில் முருகன் கோயிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி, திருமண்கரட்டில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயில... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு: அமைச்சரிடம் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் மனு

கட்டுமானப் பொருள்களின் விலையை குவாரி உரிமையாளா்கள் திடீரென உயா்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தனா். பின்னா் இது கு... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் 21.34 மி.மீ. மழை

சங்ககிரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவூா், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 21.34 மி.மீ. மழை பெய்தது. தமிழகத்தில் ஃபென்ஜால் புயலை அடுத்து தொடா்ந்து குளிா்ந்... மேலும் பார்க்க

மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி

சேலத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்தி... மேலும் பார்க்க

வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு

ஃபென்ஜால் புயல் காரணமாக ஆத்தூரில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வாழப்பாடியை அடுத்த ஆனைமடுவு அணைக்கு நீா்வரத்து அதிகமாகி அணை முழு கொள்ளளவை எட்டியது. விநாடிக... மேலும் பார்க்க