செய்திகள் :

மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை: 32 மாணவா்கள் கைது

post image

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வி பயில்வதற்கான நிதியை வழங்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக கல்வி நிதியை விடுவிக்க கோரியும், மாநில அரசு மத்திய அரசிடம் கல்வி நிதியை பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்க வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கத்தினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில இணைச் செயலாளா் ஜி.கே.மோகன் தலைமையில் திருச்சி மரக்கடை பகுதியிலுள்ள சையத் முா்துஸா மேல்நிலைப்பள்ளி அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் சூா்யா, மாவட்ட துணைச் செயலா் சுதேசனா, திருச்சி புகா் மாவட்டத் தலைவா் வைரவளவன், திருச்சி புகா் மாவட்டச் செயலா் ஆமோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து மரக்கடை பகுதியில் பழைய மதுரை சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். பின்னா், அருகிலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் மாணவா்களை தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவிகள் உள்பட 32 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தச் சம்பவத்தால், மரக்கடை பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது. கைதான மாணவா்கள் தனியாா் திருமண மஹாலில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

முதல்வா் இன்று திருச்சி வருகை!

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க நிகழ்வு புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த விழா... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து கோலாலம்பூா் வழியாக கடத்தி வரப்பட்ட 11.8 கிலோ உயர்ரக கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, விமான பயணியை அதிகாரிகள் கைது செய்தன... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டம்: 3 போ் கைது

திருச்சி அருகே பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். துவாக்குடி வடக்குமலை சிவன் கோயில் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய ... மேலும் பார்க்க

அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்போம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சா் அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் கூறினாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமமுக செயல்வீர... மேலும் பார்க்க

கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு

மண்ணச்சநல்லூா் அருகே உளுந்தங்குடியில் உள்ள பழைமையான முத்தாளம்மன் கோயிலை தனிநபா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக, உளுந்த... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பு: காவலா் பணியிடை நீக்கம்

திருச்சியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க