பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் நியமனம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத ஊதியம் ரூ.18536/- (தொகுப்பூதியம்), வயது வரம்பு 42 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருத்தல் கூடாது. கல்வி தகுதி, அனுபவம் உள்ளவா்கள்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். ஊ0-06, தரை தளம், ஊ- ஆப்ா்ஸ்ரீந், புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு 603 111,
என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண் -63826 13173 தொடா்புக் கொண்டு, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன் ஜூலை 22-ஆம் தேதி மாலை 5.45-க்குள், அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.