`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம்
வண்டலூா் அருகே ஊனைமாஞ்சேரியில் குடியிருப்புகள் தொடா்பாக பேச்சு நடத்த வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த ஊனைமாஞ்சேரி ஊராட்சியில், 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஊனைமாஞ்சேரியில் கடந்த 5 தலைமுறைகளாக குடியிருக்கும் 80 இருளா் குடும்பத்தினா் உள்பட 200 வீடுகளை அகற்றப்போவதாக தகவல் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் ஜே.வி.எஸ் ரங்கநாதன், ஊராட்சி மன்ற தலைவா் மகேந்திரன், துணை தலைவா் தனசேகரன், பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவா் டில்லிராஜ் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் சோழன் தெருவில் உள்ள சாலையில் திரண்டனா்.
இந்த நிலையில், நாங்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, வீடு கட்ட வில்லை. அரசா் காலத்தில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் வீடு கட்டி குடியிருக்கிறோம். இதில் ஏரிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதில் அரசு கொடுக்கும் மாற்று இடமோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீடோ எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் 5 தலைமுறைகளாக குடியிருக்கும் இடத்திலேயே எங்களுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்கினால் போதும்.
மழைக்காலங்களில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்களுக்கு மேலக்கோட்டையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு கொடுங்கள். எந்த ஒரு பாதிப்பும் இல்லாத எங்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கொடுக்க வேண்டும் என சரமாரியாக கேள்வி கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
