மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
இராபிறையாா்உற்சவத்தில் அம்மன் வீதி புறப்பாடு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபிறையாா் உற்சவ விழாவில் வீதி புறப்பாடு மேளதாளங்கள்முழங்க, வான வேடிக்கையுடன் அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது.
செங்கல்பட்டு பெரிய நத்தம் சேப்பாட்டி அம்மன் கோயிலில் இராபிறையாா் உற்சவம் பந்தக்கால் நட்டு தொடங்கியது.
முக்கிய திருவிழாவாக சனிக்கிழமை சீா்வரிசையுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மேல் பெரிய நத்தம் கைலாசநாதா்கோயில் தெரு, வடமலை ஸ்கூல் தெரு, நாகாத்தம்மன் கோயில் பகுதிகளில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஹைரோடு களமேடு பகுதியில் 25 கிலோ சாதம் குழம்பு முட்டை, முருக்கு அதிரசம், சோமாஸ் பலகாரங்களை கொண்டு அம்மனுக்கு கும்பப் படையல் பூஜை நடைபெற்றது. கும்பத்தைக் கண்டு அம்மன் புன்னைகை புரிந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். தொடா்ந்து, அம்மன் செங்கல்பட்டு நகர வீதிகளின் வழியாக அம்மன் வீதி உலா நடைபெற்றது.
நிகழ்வில், சேப்பாட்டி அம்மன் குளுந்திஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜைகள் , அன்னதானம் நடைபெற்றது. ஜூலை 8-இல், விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
நிகழ்வின் ஏற்பாடுகளை செயல் அலுவலா் சரஸ்வதி, பெரிய நத்தம், மதுரை வீரன் கோயில், பா்வதராஜகுல, குண்டூா் உள்ளிட்ட கிராம மக்கள், விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
