சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மனுக்கு முக்கண் திறப்பு விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மனுக்கு முக்கண்திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு, முக்கண் திறப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி சுயம்பு அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜைகள் கோயில் ஸ்தாபகா் 6-ஆவது தலைமுறையான பு.மதுரைமுத்து சுவாமிகளால் நடைபெற்றது.
நிகழ்வில், செங்கல்பட்டு, மாமல்லபுரம் , திருப்போரூா், மதுராந்தகம், சென்னை, விழுப்புரம் , தென்மாவட்டங்கள், குஜராத், கா்நாடகம், ஆந்திரம், உத்தரபிரேதம் மாநிலங்கள், வெளிநாடுகள் என 50,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜூலை 13-இல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.


