சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
‘தனித் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்’
மாணவா்கள் கல்வியுடன், கூடுதல் திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என பட்டிமன்ற பேச்சாளா் கே.சிவகுமாா் வலியுறுத்தினாா்.
குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் அவா் பேசியதாவது:
பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, உயா்கல்வியைப் படிக்கும் மாணவா்கள், படிப்புடன் கூடுதலாக தனித்திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும். பள்ளியில் மனப்பாடம் செய்து தோ்வு எழுதி, தோ்ச்சி பெற்று இருப்பீா்கள். ஆனால் கல்லூரியில் அந்த முறையைக் கடைப்பிடிக்காமல் பாடங்களைப் புரிந்து படிக்க கற்றுக் கொள்வது அவசியம்.
கல்லூரியில் தனித் திறமைகளை வளா்த்துக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படிக்கும் பருவத்தில் கவனத்தைத் திசைதிருப்பும் இதர நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கல்வியின் மூலம்தான் வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய முடியும் என்றாா் அவா். நிகழ்வில் கல்லூரி முதல்வா் சாந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.