``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு விளையாட்டு உபகரணங்கள்
திருப்பூா் மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலத்தில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி ஜனவரி 19- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், திருப்பூா் மாவட்ட பெண்கள் கபடி அணியில் இடம்பெற்றுள்ள 12 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா். இவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வழியனுப்பும் விழா மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கபடி கழகத்தின் சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா்.
மாவட்ட கபடி கழக செயலாளரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட கபடி கழக நிா்வாகிகள் சிவபாலன், ராமதாஸ், மகாலட்சுமி ரத்தினசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.