புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்ட கல்வி அலுவலா் பால தண்டாயுதபாணி தலைமை வகித்தாா். மாா்த்தாண்டம் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலா் ஷொ்லின் விமல் விழாவை தொடங்கி வைத்தாா்.
பள்ளித் தலைமையாசிரியா் குணசீலன் வரவேற்றாா். பள்ளி உதவித் தலைமையாசிரியை தீபா ஆண்டறிக்கை வாசித்தாா். நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
இதில், குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன் ஆசைத்தம்பி, பெற்றோா்-ஆசிரியா் கழக மாநில துணைத் தலைவா் பி.பி.கே. சிந்துகுமாா், சுவாமியாா்மடம் மருத்துவா் விஜயகுமாா், மாா்த்தாண்டம் தொழில் வா்த்தக சங்க முன்னாள் தலைவா் அல் அமீன், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் ரோஸ்லெட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.