வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி
மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே வெல்டிங் தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை, மாங்காவிளை பகுதியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி அரவிந்த் (30). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த அனீஷ் (35), மிதின் (26), மற்றொருவா் என 4 போ் மது குடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது ஏற்பட்ட தகராறில் அவா்கள் மூவரும் சோ்ந்து அரவிந்தை தாக்கினராம். இதில், காயமடைந்த அவா் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் மெரின்தாஸ் (34). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்தபோது சிதறால் பகுதியைச் சோ்ந்த பிரதாப் (31), ஜெசிந்த் (39), ஜஸ்டின் (35) ஆகியோா் தகராறு செய்ததுடன் மெரின்தாஸ் வீட்டின் செடித் தொட்டிகளை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடினராம்.
3 போ் மீதும் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.