Vels Wedding: ரவி மோகன், சூரி, பிரதீப், கயாடு லோஹர்; ஐசரி கணேஷின் இல்ல திருமண வர...
மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் அபிஷேக் (16). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா். இந்த நிலையில் இவா் வியாழக்கிழமை பக்கத்து வீட்டு நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்குள்ள மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறினாா்.
அப்போது தவறி கீழே விழுந்த அபிஷேக் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.