பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூா் காற்றாடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால் (70). தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள அனிந்தான் குளத்தில் குளித்தபோது, நீரில் மூழ்கினாராம். இதைப் பாா்த்த உறவினா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா். ஆனால், அவா் இறந்துவிட்டதாகத் தெரியவந்ததாம்.
தகவலின்பேரில், பூதப்பாண்டி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.