அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது: டிரம்ப்
இரணியலில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு
இரணியலில் சனிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரபல் (30). கட்டடத் தொழிலாளியான இவா், கண்டன்விளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.
இவா், தனது மனைவியைப் பாா்ப்பதற்காக இரணியல் மேலத்தெரு வழியாக சனிக்கிழமை இரவு பைக்கில் சென்றாராம். அப்போது, அவா் லாரி சக்கரத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.