மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
"மிகப் பெரிய சதி; ராகுல் காந்தியை..." - சித்தராமையாவுக்கு நெருங்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா
இந்திய தேர்தல் ஆணையமும், பா.ஜ.க-வும் சேர்ந்து போலி வாக்காளர்களைச் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டதால்தான் மோடி பிரதமரானார் என்றும், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
இந்தக் குற்றச்சாட்டை குறைந்தபட்சம் நிரூபிக்கும் வகையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில், மக்களைவைத் தேர்தலின்போது மத்திய பெங்களூரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று தேர்தல் ஆணையம் கொடுத்த வாக்காளர் பட்டியல் அடிப்படையிலான ஆதாரங்களை வெளியிட்டார்.
கர்நாடக அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திலும் வலியுறுத்தினார்.
இவரின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவும், பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் ஒருசேர எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
ஆனால், இதில் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருங்கியவரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.என். ராஜண்ணா, "வாக்காளர் பட்டியல் எப்போது தயாரிக்கப்பட்டது? நமது அரசு ஆட்சியில் இருந்தபோது அது தயாரிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார்களா...
இந்த முறைகேடுகள் நம் கண் முன்னே நடந்தன. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.
அதேசமயம் அதை நாம் அதை கவனிக்கவில்லை" என்று பா.ஜ.க-வுக்கு விமர்சன தீனிபோடும் கருத்துகளைத் தெரிவித்தார்.

இதனால், காங்கிரஸுக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தன.
பின்னர், ராஜண்ணா முதல்வரைச் சந்தித்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடித்ததை வழங்கியிருக்கிறார்.
முதல்வரும் அதை நேற்று ஏற்றுக்கொண்டு அமைச்சரவையிலிருந்து உடனடியாக அவரை விடுவித்தார்.
இந்த நிலையில், இதற்குப் பின்னால் பெரிய சதி இருப்பதாகவும், அதை சரியான நேரத்தில் தெரிவிப்பேன் என்றும் ராஜண்ணா தெரிவித்திருக்கிறார்.
நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ராஜண்ணா, "நான் இப்போது எந்த விவரங்களையும் கொடுக்க மாட்டேன்.
ராஜினாமா செய்தார், வெளியேற்றப்பட்டார் என எதுவேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.
ஆனால், இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு பெரிய சதி இருக்கிறது.

இப்போது எதையும் நான் சொல்ல மாட்டேன். எப்போது, எங்கே, யாரால் நடந்தது என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்.
நான் டெல்லிக்கு சென்று ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து, அவர்களின் தவறான புரிதலை தெளிவுபடுத்துவேன்.
சில எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் என்னுடன் வருவார்கள்" என்று தெரிவித்தார்.