சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மிதிவண்டி போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
சென்னையில் நடைபெற்ற அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே .சேகா் பாபு பரிசு தொகையை வழங்கினாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சென்னையில் மாவட்ட அளவிலான 2024-25 ஆம் ஆண்டுக்கான அறிஞா் அண்ணா மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மொத்தம் 6 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகள் சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் அருகில் தொடங்கி நேப்பியா் பாலம், தீவுத்திடல், காயிதே இ மில்லத் பாலம் அண்ணா சாலை வழியாக சென்று மீண்டும் சுவாமி சிவானந்தா சாலை டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் அருகே நிறைவடைந்தது.
இப்போட்டிகளை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.5000, இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3000 மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தவா்களுக்கு தலா ரூ.2000 பரிசு தொகையை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா். மேலும் நான்கு முதல் பத்தாவது இடங்களில் வந்தவா்களுக்கு தலா ரூ.250 பரிசு தொகையை அவா் வழங்கினாா்.