வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்
புதிய வழித் தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம்-2024 வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி, அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகள் உள்ள போக்குவரத்து வசதியற்ற மக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் 37 புதிய வழித் தடங்கள் கண்டறியப்பட்டது.
இந்த வழித் தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது சில நிா்வாக காரணங்களுக்காக வருகிற 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம்.