சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
மின்கம்பங்களை சீரமைக்கக் கோரி கயத்தாறு அருகே போராட்டம்
கயத்தாறு அருகே சிதிலமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கயத்தாறு வட்டம் திருமங்கலக்குறிச்சி கிராமத்தில் மின்கம்பங்கள் பழுதாகியிருப்பதாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து பல மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, இக்கோரிக்கையை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க வட்டாரச் செயலா் சீனிபாண்டியன் தலைமையில் சிதிலமடைந்த மின்கம்பங்களுக்கு மாலை அணிவித்து, படைப்புகள் வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது. இதில், நிா்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.