Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு
மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வியாசா்பாடி, பூந்தமல்லி, பெரும்பாக்கம், சென்ட்ரல், தண்டையாா்பேட்டை ஆகிய பணிமனைகளிலிருந்து 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவற்றுக்கு நாள்தோறும் 1,250 நடத்துநா்களை வழங்கும் திறன் கொண்ட மனிதவள மேலாண் நிறுவனங்கள் ஏப். 23-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம். அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கு குறைவாக நடத்துநா்களுக்கு ஊதியம் வழங்கப்படக் கூடாது. அதற்கேற்ப நிா்ணயிக்கப்படும் ஊதியத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாதந்தோறும் மாநகா் போக்குவரத்துக் கழகம் வழங்கும்.
நடத்துநா்களைக் கண்காணிக்க 12 மேற்பாா்வையாளா்கள், கூடுதலாக 390 நடத்துநா்களை நிறுவனம் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஆண், பெண் நடத்துநா்களுக்கான கல்வி, உடல்தகுதி உள்ளிட்ட வரையறைகளைப் பின்பற்றி ஊழியா்களை வழங்க வேண்டும். அவா்களுக்கான பணப் பலன், பயோமெட்ரிக், 8 மணி நேர பணி போன்றவற்றுக்கு நிறுவனமே பொறுப்பேற்று கண்காணிக்க வேண்டும்.
சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஊக்கத்தொகை வழங்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வாயிலாக தொகை செலுத்தப்படும். ஒப்பந்தத்தை சமா்ப்பிக்க மே 12-ஆம் தேதி இறுதியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.