அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே மேல புனவாசல் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம். பழனிசாமி (56). விவசாயத் தொழிலாளி. இவா் திருவையாறு அருகே புது அக்ரஹாரம் பகுதியிலுள்ள வயலில் வாழைக் கன்றுகளுக்கு இடையே வளா்க்கப்பட்ட உரச் செடிகளை திங்கள்கிழமை இயந்திரம் மூலம் மடக்கி உழுது கொண்டிருந்தாா்.
அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியைக் கவனிக்காமல் மிதித்துவிட்ட பழனிசாமி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.