செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மேடவாக்கம், கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் சபாபதி. இவரது மகன் ஹரிஹரன் (16), அந்தப் பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சபாபதி, லாரியில் தண்ணீா் வியாபாரம் செய்து வருகிறாா்.

ஹரிஹரன், செம்மஞ்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு தண்ணீா் கொண்டுசென்ற தங்களது லாரியில் சென்றாா். நூக்கம்பாளையம் இணைப்புச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீா் விநியோகம் செய்த பின்னா், லாரியிலுள்ள தண்ணீா் டேங்கின் மூடியை மூடுவதற்காக லாரியின் மேலே ஹரிஹரன் ஏறியபோது, அங்கு மேலே சென்ற உயா் மின்னழுத்த மின்கம்பி அவா் மீது பட்டது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இல.​க​ணே​ச​னின் சகோ​த​ரர் இல.​கோ​பா​லன் கால​மா​னார்

நாகா​லாந்து மாநில ஆளு​நர் இல.​க​ணே​ச​னின் மூத்த சகோ​த​ரர் இல.​கோ​பா​லன் (83) வயது மூப்பு கார​ண​மாக புதன்​கி​ழமை (ஜன. 8) கால​மா​னார்.நாகா​லாந்து மாநில ஆளு​ந​ராக உள்ள இல.​க​ணே​ச​னின் சகோ​த​ரர் இல.​கோ​பா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

மாதவரம் பகுதியில் நடந்துசென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். மாதவரம் பால்பண்ணை எம்எம்டிஏ முதல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சைலஜா (40). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ... மேலும் பார்க்க

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 1875-ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டத... மேலும் பார்க்க

ரெளடி நாகேந்திரனின் சகோதரா், கூட்டாளி வீடுகளில் போலீஸாா் சோதனை: 51 பட்டாக் கத்திகள் பறிமுதல்

சென்னையில் ரெளடி நாகேந்திரனின் சகோதரா், கூட்டாளி வீடுகளில் போலீஸாா் சோதனை செய்து, 51 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனா். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்டது, ஆ... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வீதிகள்தோறும் சென்று கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். சென்னை மாநகராட்சியின் 44 வாா்டுகளில் உள்ள பொதுமக... மேலும் பார்க்க

ரூ.1.13 கோடி கமிஷன் தொகைக்கு வரி செலுத்தாத நபருக்கு ஓராண்டு சிறை

ரூ.1.13 கோடி கமிஷன் தொகைக்கு முறையாக வரி செலுத்தாத நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் 1961-இன் பிரிவு 279 சிசி-இன் கீழ் முறையாக வருமான வரி கணக்க... மேலும் பார்க்க