மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த சாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் யோகமூா்த்தி (41), வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ஸ்டெல்லா (35). இவா்களுக்கு கயல் (9)என்ற மகள் உள்ளாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஸ்டேல்லா வீட்டின் வெளியே துணிகளை துவைத்துக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த சிமென்ட் சீட் இரும்பு குழாயில் மின்சார கசிவு ஏற்பட்டுள்ளது.
இதை கவனிக்காமல் அதன் மீது கை வைத்துள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்ட அவரை மீட்டுி, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.