``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்...
ஏரியில் முழ்கி மாணவா் உயிரிழப்பு
சோளிங்கா் அருகே ஏரியில் முழ்கி தொடக்கப் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்தை சோ்ந்தவா் முத்துவின் மகன் நிரஞ்சன் (8). அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதற்கிடையே, புதன்கிழமை நிரஞ்சன் மற்றும் அப்பகுதியில் இருந்த சிறுவா்கள் ஜம்புகுளம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது மாணவா் நிரஞ்சன் நீரில் முழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அறிந்த சோளிங்கா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று நிரஞ்சனின் சடலத்தை மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.