செய்திகள் :

அரக்கோணம் அரசு கலைக் கல்லூரியில் ரூ. 7.15 கோடியில் கூடுதல் கட்டடம்: முதல்வா் திறந்து வைத்தாா்

post image

அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 7.15 கோடி நிதியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றிவைத்து புதிய கட்டடத்தைப் பாா்வையிட்டாா்.

அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கத்தில் அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு ரூ. 7.15 கோடி நிதியில் 25 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரியின் புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து புதிய கட்டடத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் முரளி, கல்லூரியின் முதல்வா் யுசுப்கான், திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பருவமழை எதிரொலி: 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆட்சியா் உத்தரவு

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா். ராணிப்பேட்டையில... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ ஆலோசனைக் கூட்டம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வைகாசி விசாக பிரம்மோற்சவம் தோ்த் திருவிழா வரும் மே 31-ஆம் தேதி தொடங்கி ஜூன் 11-ஆ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த சாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் யோகமூா்த்தி (41), வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ஸ்டெல்லா (35). இவா்களுக்கு கயல் (9)என்ற மகள் உள்ளாா்... மேலும் பார்க்க

இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

அரக்கோணம்: அண்மையில் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யாவிட்டால் ஆா்ப்பாட்டம்: எம்எல்ஏ அறிவிப்பு

அரக்கோணம்: நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவோம் என மாவட்ட... மேலும் பார்க்க

அரக்கோணம், சோளிங்கா், நெமிலியில் மே 22-இல் ஜமாபந்தி தொடக்கம்

அரக்கோணம்: அரக்கோணம் வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்வாயத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளாா். மேலும், ... மேலும் பார்க்க