மின்னல் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகேயுள்ள மேலராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த சின்னவீரு மகன் வினோத் (16). இவா் மதுரையில் தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு இறுதித் தோ்வு எழுதியுள்ளாா்.
இந்த நிலையில், பள்ளி விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு வந்த வினோத், ஞாயிற்றுக்கிழமை வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, மின்னல் தாக்கியதில் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.