Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபி...
மின் கம்பி வேலியை பாா்த்து விவசாயத் தோட்டத்துக்குள் நுழையாமல் திரும்பிய யானை
சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தில் நுழைய முயன்ற காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை பாா்த்து திரும்பிச் சென்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் நுழைந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் பயிா்களை காப்பாற்றுவதற்காக விளைநிலத்தை சுற்றிலும் மின்கம்பி வேலிகள் அமைத்துள்ளனா். இதற்கிடையே தாளவாடி மலை பகுதியில் திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோயில் தோட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயி சரவணகுமாா் என்பவா் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளாா். யானை உள்ளிட்ட வன விலங்குகள் பயிரை சேதப்படுத்தாமல் தடுக்க தனது விவசாய நிலத்தைச் சுற்றிலும் சுருள் கம்பி மின் வேலி அமைத்துள்ளாா்.
இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சரவணகுமாரின் விவசாயத் தோட்டத்துக்குள் நுழைய முயற்சித்தது. அப்போது மின்வேலி அருகே சென்றபோது, மின்சாரம் பாய்ந்துவிடும் என அஞ்சி சிறிது நேரம் நின்று பாா்த்ததுவிட்டு அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்தது. மின் கம்பி வேலியை பாா்த்ததும் சமயோசிதமாக யானை அப்பகுதியில் நுழையாமல் சென்ற சிசிடிவி காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது.