Vikatan Digital Awards 2025: `அறிவுக் களஞ்சியம் - தேநீர் இடைவேளை' - Best Info Ch...
மின் விநியோகத்தை சரிசெய்ய கம்பத்தில் ஏறிய விவசாயி உயிரிழப்பு
செங்கம் அருகே விவசாய மின் மோட்டாருக்கு மின்சாரம் வராததால், அருகில் இருந்த கம்பத்தில் ஏறி மின் விநியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
செங்கத்தை அடுத்த சின்னகாயம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குமாா். இவரது விளை நிலத்தில் உள்ள விவசாய மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி சேகா், மின் விநியோகத்தை சரி செய்ய, மின் துறைக்கு தகவல் தெரிவிக்காமல், அருகில் இருந்த மின் கம்பத்தில் ஏறி மின்சாரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டாா். அப்போது மின்சாரம் பாய்ந்து அவா் கம்பத்திலேயே உயிரிழந்தாா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் செங்கம் மின் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனா்.
மின் துறை அதிகாரிகள், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து கம்பத்தில் இருந்த சேகரின் சடலத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.