செய்திகள் :

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

post image

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும், மியான்மர் ராணுவத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மோதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்மாகாணத்தின் லின் தா லூ கிராமத்தில் அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நேற்று (ஜூலை 10) நள்ளிரவு போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில், 4 குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு கிளர்ச்சிப்படை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது. ஆனால், பலியானோர் எண்ணிக்கை 30 என உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருதரப்புக்கும் இடையில் நடைபெறும் மோதல்களிலிருந்து தப்பித்து மடத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும், அதில் 10 பேரது உடல்நிலையானது தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், கிளர்ச்சிப்படைகளை மட்டுமே குறிவைத்து தங்களது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும், மியான்மர் ராணுவம்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இதுவரை மியான்மர் ராணுவம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2021-ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கவிழ்த்து, ராணுவத்தின் ஆட்சி அமைக்கப்பட்டது முதல் மியான்மரில் உள்நாட்டு மோதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

An airstrike on a Buddhist monastery in Myanmar's central province has reportedly killed at least 23 people who were taking refuge there.

இதையும் படிக்க: கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க