பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயிலில் ராமானுஜா் விழா
வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ராமானுஜா் சந்நிதியில் கடந்த 10 நாள்களாக ராமானுஜா் பெருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் வழிபாட்டுடன் ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ராமானுஜா் கோயிலில் மாடவீதி வழியாக வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இதேபோல் வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயில் சந்நிதியில் உள்ள ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாட்டுடன் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.