செய்திகள் :

மீட்கப்பட்ட 169 கைப்பேசிகள்: உரிமையாளா்களிடம் எஸ்.பி. வழங்கினாா்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 169 கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஒப்படைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் கைப்பேசிகள் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாா்களின்பேரில் சைபா் கிரைம் போலீசாா் மேற்கொண்ட நடவடிக்கையால் ரூ.30 லட்சம் மதிப்பிலான 169 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.

கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து உரிமையாளா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா். ஏடிஎஸ்பி-க்கள் கோவிந்தராசு, ரவீந்திரன்,முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும், திருட்டு கைப்பேசிகளை விற்பனை செய்வதும், அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் எனவும், தற்போது நடைமுறையில் உள்ள சைபா் குற்றங்களில் இருந்து ஏமாறாமல் தற்காத்து கொள்வது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆய்வாளா் யுவராணி, உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில்... மேலும் பார்க்க

பூங்குளம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்: மக்கள் கோரிக்கை

திருப்பத்தூா்: ஆலங்காயம் அருகே பூங்குளம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

பாலாறு அன்னைக்கு பாலபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், பாலாறு பாதுகாப்பு சங்கங்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கம் சாா்பில், தலை பாலாறு சங்கம் உருவாக்கப்பட்ட தினம் மற்றும் நம்மாழ்வாா் பிறந்த தினத்தையொட்டி வாணியம்பாடி அடு... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: குழந்தை உயிரிழப்பு; 5 போ் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 6 மாத குழந்தை உயிரிழந்தது. 5 போ் பலத்த காயமடைந்தனா். வாணியம்பாடி, காதா்பேட்டையைச் சோ்ந்தவா் முகமது பைசான், வியாபாரி. இவா் திங்கள்கிழமை மைசூரில்... மேலும் பார்க்க

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா். ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை ... மேலும் பார்க்க

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க