செய்திகள் :

மீண்டும் இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதன்!

post image

நடிகர் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் புதிய படமொன்றை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து, லவ் டுடே படத்தை இயக்கி, நாயகனாக நடித்தார்.

அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் நாயகனாகவும் அங்கீகாரம் பெற்றார். பின், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். அதுவும் அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

அடுத்ததாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது, அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு, ‘டூட்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் தானே இயக்கி, நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்!

இதையும் படிக்க: ரூ. 50 கோடி கூட வசூலிக்காத தக் லைஃப்!

ரூ.300 கோடி வசூலைக் கடந்த ஹவுஸ்ஃபுல் 5!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் ரூ. 300 கோடியைக் கடந்துள்ளது.பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் உருவா... மேலும் பார்க்க

இன்டர் மிலன், மான்செஸ்டர் சிட்டி தோல்வி: ரசிகர்கள் அதிர்ச்சி!

கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மிலன், மான்செஸ்டர் சிட்டி தோல்வியடைந்தது அந்த அணிகளின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபிஃபா முதல்முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில... மேலும் பார்க்க

சிலைகளுடன் விளையாடும் மெஸ்ஸி..! இன்டர் மியாமியை விமர்சிக்கும் இப்ராஹிமோவிச்!

கிளப் உலகக் கோப்பையில் பிஎஸ்ஜி அணி இன்டர் மியாமியை வீழ்த்தியது குறித்து இப்ராஹிமோவிச் ‘மெஸ்ஸி தோற்கவில்லை இன்டர் மியாமிதான் தோற்றது’ எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.கிளப் உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 ... மேலும் பார்க்க

கதாநாயகியாகும் மோகன்லால் மகள்! இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் மோகன்லாலின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராகக்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பிக் பாஸ் காதலர்களை சந்தித்த ஃபரீனா!

பிக் பாஸ் காதலர்களான செளந்தர்யா நஞ்சுண்டான், விஷ்ணு விஜய் ஆகியோரை நடிகை ஃபரீனா சந்தித்துப் பேசியுள்ளார். விமான நிலையத்தில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் ச... மேலும் பார்க்க