செய்திகள் :

மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!

post image

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன், தீபக், செளந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த ஜனவரியுடன் நிறைவு பெற்றது. இதில் முத்துக்குமரன் வெற்றியாளராக வாகை சூடினார். அதற்கு அடுத்ததடுத்த இடங்களில் செளந்தர்யா மற்றும் வி.ஜே. விஷால் இருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு நேர்காணல்களிலும் படப்பிடிப்புகளிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் பாதைகளில் பயணித்து வருகின்றனர்.

இதனிடையே பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதில் ஜெஃப்ரி, செளந்தர்யா, ரயான், முத்துக்குமரன், தீபக், மஞ்சரி, ஜாக்குலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிக் பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து நடனம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஜெஃப்ரி, செளந்தர்யா, ரயான்

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இது குறித்த எந்தவித அறிவிப்பையும் தொலைக்காட்சி நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!

தெலுங்கு கபாலி படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தற்கொலை?

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 44.கோவாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உ... மேலும் பார்க்க

“உங்கள் மன அமைதியைக் குலைத்ததற்கு…” ராகுல் காந்தியின் பேச்சால் பரபரப்பு!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?679e240dc9afcbb7ca5dad88/67a0bcc631cb129377abbbfc/thumbnail-1-... மேலும் பார்க்க

பல மொழி சின்னதிரைகளில் நடிப்பது சிறந்த அனுபவம்: செளந்தர்யா ரெட்டி!

பல மொழிகளின் சின்னதிரை தொடர்களில் நடிப்பது சிறந்த அனுபவம் என நடிகை செளந்தர்யா ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பிறந்திருந்தாலும் கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழ் மொழித் தொடர்களிலும் ச... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!

நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் சின்னதிரை நடிகையுமான ஜோவிதா லிவிங்ஸ்டன், மெளனம் பேசியதே தொடரில் இருந்து விலகியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த அவர், தற்போது அத... மேலும் பார்க்க

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்.10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்தனர்.தஞ்சாவ... மேலும் பார்க்க

ஐயாறப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா!

பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஸ்ரீ... மேலும் பார்க்க