தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு! கார்கே குற்றச்சாட்டு!
மீண்டும் கேப்டனாவதை தோனி எதிர்பார்த்திருக்க மாட்டார்: ஆரோன் பின்ச்
ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது, இவ்வாறான சூழ்நிலைகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் எனக் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணி முதல் அணியாக ஐபிஎல் 2025இல் இருந்து வெளியேறியுள்ளது. சொந்த மண்ணில் 5 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது.
புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியுற்றாலும் த்ரில்லராக சென்றது.
ருதுராஜுக்குப் பதிலாக தோனி கேப்டனாக மாறியிம் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது. இது குறித்து பின்ச் கூறியதாவது:
தோனி சில ஆண்டுகளுக்கு முன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியபோது, இவ்வாறான சூழ்நிலைகளை மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். ஆனால், தற்போது சிஎஸ்கேவுக்கு எதுவும் சாதகமாக இல்லை.
தோனி 43 வயதுடையவர், ஆண்டுக்கு ஒரு முறை அதுவும் ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். ஆனால், அவர் களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மேஜிக்கலானது.
அவர் ட்ரெஸ்ஸிங் ரூமில் (ஓய்வறையில்) இருந்து வெளியே வரும்போது, பேட் செய்ய வரும்போது ஏற்படும் சத்தம், எல்லாமே அசாத்தியமானது.
தோனி இன்னும் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அவரை நேரில் காணும் வாய்ப்பு இருந்தால், ஒவ்வொரு ரசிகரும் குறைந்தது ஒரு சிஎஸ்கே போட்டியாவது நேரில் பார்த்தாக வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.