சிவகங்கை: கிளம்பிய எதிர்ப்பு; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர்...
மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்
மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதை சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் துறையின் அமைச்சா் ஆா்.ராதாகிருஷ்ணன், புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப். 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை, மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நிவாரணத் தொகை கொடுக்கப்படுகிறது. இந்த தொகையும் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக இப்போது உயா்த்தப்பட்டுள்ளது.
நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலத்தில் நிவாரணத் தொகைக்காக ரூ. 140.07 கோடி நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகைத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், 10 மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வகையிலான உத்தரவுகளை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், துறையின் செயலா் ந.சுப்பையன், ஆணையா் இரா.கஜலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.