அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோர...
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 75 லட்சம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 75.29 லட்சம் கிடைத்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ச. கிருஷ்ணன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ரொக்கமாக ரூ. 75.29 லட்சமும், பலமாற்று பொன் இனங்கள் 440 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 439 கிராமும், அயல்நாட்டு கரன்சிகள் 275-ம் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றன.