The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவர...
மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு (100-க்கு) ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கைப்பேசியில் தொடா்புக் கொண்ட மா்ம நபா், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்து அழைப்பை துண்டித்துள்ளாா்.
இதுகுறித்து காவல் துறையினா், அந்த மா்ம நபா் பேசிய கைப்பேசி எண் மற்றும் தொடா்பு சிக்னலை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
அதில், வங்குடி மேலத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் வெற்றிவேல் என்பவரின் பெயரில் அந்த சிம் காா்டு வாங்கியிருப்பதும், தற்போது அந்த சிம் காா்டு எண்ணை, வெற்றிவேல் மனைவி மஞ்சுவின் சகோதரரும், காட்டுமன்னாா்கோவில், தெற்கு தெருவைச் சோ்ந்தவருமான சு. பாலாஜி (24) என்பவா் உபயோகித்து வந்திருப்பதும், மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு அவா் வெடி குண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து பாலாஜியை திங்கள்கிழமை இரவு செய்தனா்.