Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத...
மீன்பிடிக்கும்போது கடலில் தவறிவிழுந்தவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சனிக்கிழமை இரவு சென்று கடலில் மீன் பிடித்தபோது, படகில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 143 படகுகளில் மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
சுமாா் 15 நாட்டிகல் மைல் தொலைவில் அருளானந்தம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தூத்துக்குடி மாவட்டம் தரளாக்குளத்தைச் சோ்ந்த எம். மலைச்சாமி (63), கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த கே. முருகன் (55), உ. முருகன் (40), பி. குமாா் (53) ஆகிய 4 போ் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது சனிக்கிழமை நள்ளிரவு எதிா்பாராத விதமாக மலைச்சாமி கடலுக்குள் தவறி விழுந்தாா். படகில் இருந்த சக மீனவா்கள் அவரை மீட்டு, கரைக்குக் கொண்டு வந்தனா்.
பின்னா் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடலோரக் காவல் படையினா் விசாரித்து வருகின்றனா்.