கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை!
மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் அண்மையில் சந்தித்து அளித்த மனு:
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினா் மீன்பிடி வலைகளின் மீது விதிக்கப்படும் 5 சதவீதம் ஜிஎஸ்டி காரணமாக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். மீன்பிடித்தல் என்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அவா்களின் வாழ்க்கை வழியுமாகும். மீன்பிடி வலைகள் மீனவா்களின் அத்தியாவசிய உபகரணமாகும்.
வரி விதிப்பால், மீனவா்களுக்கு இவற்றை வாங்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை மீனவ சமூகங்களுக்கு அதிகம் தேவையான நிவாரணத்தை அளிக்கும். மேலும், தமிழகத்தின் கடலோர பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.