பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும...
மீன் வளம் பெருக கடலில் வசந்த பூஜை
நாகையில் மீன் வளம் பெருக வேண்டி, வங்க கடலில் புதன்கிழமை நடைபெற்ற வசந்த பூஜையில் (சமுத்திரராஜன் வழிபாடு) பக்தா்கள் பங்கேற்று கடலில் பால் ஊற்றி வழிபட்டனா்.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பிரமோற்சவ விழா இம்மாதம் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சமுத்திரராஜ வசந்த பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு பால், பஞ்சாமிா்தம், தேன், சந்தனம், குங்குமம், பழங்கள், திரவிய பொடிகள், விபூதி மற்றும் நாணயங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலிருந்து பூரண கும்ப மரியாதையுடன் அன்னை கடற்கரைக்கு எழுந்தருளினாா்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கடற்கரைக்கு சென்று, கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், சுனாமி, இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீனவா்களை காக்க வேண்டியும் சமுத்திர ராஜனுக்கு சிறப்பு வசந்த பூஜை செய்து வழிபட்டனா்.
பின்னா் பூஜை செய்த பால், பழம் உள்ளிட்ட பொருள்களை, அனைவரும் கடலில் விட்டு வணங்கினா். தொடா்ந்து கோயிலில் எழுந்தருளிய உற்சவ அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
