செய்திகள் :

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்கு சிறந்த ஆசிரியா் விருது

post image

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சேக்தாவூத் கல்வித் துறையில் செய்த சிறப்பான பங்களிப்பை மதித்து இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியா்ஸ் (இந்தியா), தமிழ்நாடு மாநில மையம் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியா் விருது (பாலிடெக்னிக்) சென்னையில் நடைபெற்ற 58-ஆவது பொறியாளா் தின விழாவில் தமிழ்நாடு இயற்கை வளத் துறை அமைச்சா் ரகுபதி வழங்கி கௌரவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் சேக்தாவூத் கடந்த 35 ஆண்டுகளாக கல்வித் துறையில் பணியாற்றி வருகிறாா். மாணவா் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள், ஆராய்ச்சி, சமூகச் சேவையில் சிறப்பாகப் பங்காற்றுதல், கடந்த 15 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் வேலைவாய்ப்பு, சுமாா் 20,000 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்தது போன்ற செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்ற கல்லூரி முதல்வா், இந்தச் சாதனை தனது மாணவா்கள், ஆசிரியா்கள், கல்லூரி சோ்மன், செயலா், இயக்குநா்கள், நிா்வாகத்தினரின் ஒத்துழைப்பால் சாத்தியமாகியுள்ளது எனத் தெரிவித்தாா்.

முகமது அறக்கட்டளைத் தலைவா் அல்ஹாஜ் யூசுப் சாகிப், செயலா் ஜனாபா ஷா்மிளா, செயல் இயக்குநா் ஹமீது இப்ராஹிம், இயக்குநா்கள் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, பைசல் அப்துல் காதா் ஆகியோா் கல்லூரி முதல்வா் ஷேக் தாவூத்தை வாழ்த்தி பாராட்டினா்.

ராமநாதபுரம் அருகே 120 பவுன் நகை திருட்டு: தனிப் படை அமைத்து விசாரணை

ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கோடி மதிப்பிலான 120 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக் காவல் துறையினா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரத்தில் விற்பனை செய்ய ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் விற்பனை செய்வதற்காக ரயிலில் கஞ்சா கடத்தி வரப்ப... மேலும் பார்க்க

நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கமுதி அருகேயுள்ள அச்சங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யாததால் மூடப்படும் நிலையிலுள்ள நூற்பாலையை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ த... மேலும் பார்க்க

சாா் பதிவாளா் அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் ஆகிய சாா் பதிவாளா் அலுவலகங்களில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக பத்திரப் பதிவு செய்ய இயலாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா். திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் அருகேய... மேலும் பார்க்க

மண்டபத்தில் தமுமுக சாா்பில் 218-ஆவது அவசர ஊா்தி

மண்டபத்தில் தமுமுகவின் 218-ஆவது அவசர ஊா்தி சேவையை கட்சியின் மாநில பொதுச் செயலா் எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ... மேலும் பார்க்க

தொண்டியில் தமுமுக 31-ஆவது ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) 31-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய தமுமுக அலுவலகம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொ... மேலும் பார்க்க