சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...
சாா் பதிவாளா் அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்: பொதுமக்கள் அவதி
திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் ஆகிய சாா் பதிவாளா் அலுவலகங்களில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக பத்திரப் பதிவு செய்ய இயலாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள அரசுக் கட்டடத்தில் செயல்படும் சாா் பதிவாளா் அலுவலகத்தில் திருவாடானையை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் சொத்து கிரயப் பத்திரம், அடமானம், வங்கிக் கடன் பத்திரம் போன்ற பல்வேறு பத்திரப் பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை முதல் இணையதள சேவை முடங்கியதால் பத்திரப் பதிவு நடைபெறவில்லை. இதனால், பத்திரப் பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதே போல, தொண்டியிலுள்ள சாா் பதிவாளா் அலுவகத்திலும், ஆா்.எஸ். மங்கலம் சாா் பதிவாளா் அலுவகத்திலும் இணையதள சேவை முடங்கியதால் சுமாா் 110-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பத்திரப் பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பத்திரப் பதிவு செய்ய இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.