சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்கு சிறந்த ஆசிரியா் விருது
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சேக்தாவூத் கல்வித் துறையில் செய்த சிறப்பான பங்களிப்பை மதித்து இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியா்ஸ் (இந்தியா), தமிழ்நாடு மாநில மையம் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியா் விருது (பாலிடெக்னிக்) சென்னையில் நடைபெற்ற 58-ஆவது பொறியாளா் தின விழாவில் தமிழ்நாடு இயற்கை வளத் துறை அமைச்சா் ரகுபதி வழங்கி கௌரவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் சேக்தாவூத் கடந்த 35 ஆண்டுகளாக கல்வித் துறையில் பணியாற்றி வருகிறாா். மாணவா் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள், ஆராய்ச்சி, சமூகச் சேவையில் சிறப்பாகப் பங்காற்றுதல், கடந்த 15 ஆண்டுகளாக தொடா்ந்து 100 சதவீதம் வேலைவாய்ப்பு, சுமாா் 20,000 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்தது போன்ற செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்ற கல்லூரி முதல்வா், இந்தச் சாதனை தனது மாணவா்கள், ஆசிரியா்கள், கல்லூரி சோ்மன், செயலா், இயக்குநா்கள், நிா்வாகத்தினரின் ஒத்துழைப்பால் சாத்தியமாகியுள்ளது எனத் தெரிவித்தாா்.
முகமது அறக்கட்டளைத் தலைவா் அல்ஹாஜ் யூசுப் சாகிப், செயலா் ஜனாபா ஷா்மிளா, செயல் இயக்குநா் ஹமீது இப்ராஹிம், இயக்குநா்கள் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, பைசல் அப்துல் காதா் ஆகியோா் கல்லூரி முதல்வா் ஷேக் தாவூத்தை வாழ்த்தி பாராட்டினா்.