முசரவாக்கத்தில் துரியோதனன் படுகளம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அடைஞ்சியம்மன் மற்றும் கோட்டை மாரியம்மன் மைலாா் திருவிழாவையொட்டி, புதன்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அடைஞ்சியம்மன் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் தை மாதம் மைலாா் திருவிழா என்ற பெயரில் தோ் இழுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு முதல் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை கோலாட்டம், புலி ஆட்டம், காளிவேடம், பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் தோ் இழுத்தல், வேல் குத்துதல், அம்மனுக்கு பறந்து வந்து மாலையிடுதல் உள்ளிட்ட நோ்த்திக் கடன்களை பக்தா்கள் நிறைவேற்றினா். அம்மன் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் தொடா்ச்சியாக 2-ஆவது நாள் நிகழ்ச்சியாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்வை முசரவாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் வந்திருந்து பாா்த்ததுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவிரும், முசரவாக்கம் கிராம மக்களும் இணைந்து செய்திருந்தனா்.