முச்சந்தி காளியம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்
நாகை வெளிப்பாளையம் ஸ்ரீ புவனேஸ்வரி ஸ்ரீமுச்சந்தி காளியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்டோா் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை பூா்த்தி செய்தனா்.
இக்கோயிலில் 134-ஆம் ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாா்ச் 28-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி, ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு, அக்னி கப்பரை வீதி உலா, ஊஞ்சல் உற்சவம், திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்டோா், சிவன் கோயில் குளக்கரையில் இருந்து பால் குடங்களை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சென்றடைந்தனா்.
பின்னா், முச்சந்தி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.