``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
முடா முறைகேடு: சித்தராமையாவின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
புது தில்லி: முடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மைசூரு நிலமுறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குத் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதிக்கு மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.
அதாவது, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை அரசு எடுத்துக்கொண்டு, நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியதாகவும், இதனால் கர்நாடக அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சித்தராமையாவுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.