செய்திகள் :

முதல்முறையாக மேக்னஸை தோற்கடித்த குகேஷ்!

post image

நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்செனை இந்திய வீரர் டி.குகேஷ் தோற்கடித்துள்ளார்.

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் டி. குகேஷ், அர்ஜுன் எரிகைசி பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியின் ஆறாவது சுற்றில், 5 முறை உலக சாம்பியனான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனை குகேஷ் எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதல் மேக்னஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இறுதியில் சமர்த்தியமாக விளையாடிய குகேஷ் வெற்றியை பதிவு செய்தார்.

இந்த தோல்வியால் மேஜையைத் தட்டி தனது அதிருப்தியை மேக்னஸ் வெளிப்படுத்தினார். பின்னர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸை குகேஷ் முதல்முறையாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை! 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பின்றி ஆயுள்!!

1,000 கோல்களை நோக்கி..! 93.7% முடித்த ரொனால்டோ!

போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 1,000 கோல்களை நோக்கி நகர்ந்து வருகிறார். 40 வயதான ரொனால்டோ, “1000 கோல்கள் அடிப்பது எனது கனவு” என 900 கோல்களை நிறைவு செய்தபோது கூறியிருந்தார். சொன்னதுபோ... மேலும் பார்க்க

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார்.நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சர்ச்சைகளிலும் இருக்கிறார். ஆனால், இதற்கிடையே ஜீனி, கராத்தே பா... மேலும் பார்க்க

சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!

சூர்யா - 46 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் திரையரங்கம் மற்றும் ஓடிடி உள்பட இதர உரிமங்களுடன் ரூ. 235 ... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் அமீர் கான்!

நடிகர் அமீர் கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்தார... மேலும் பார்க்க

வென்றதா நாயகன் கூட்டணி? தக் லைஃப் - திரை விமர்சனம்!

நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது. தில்லியில் கதை ஆரம்பமாகிறது. வில்லன் ஒருவரிடம் சக வில்லன்களான கமல் ஹாசன் (ரங்கராய சக்... மேலும் பார்க்க

இதயம் உடைந்துவிட்டது: ஸ்மிருதி மந்தனா

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பலிக்கு ஆர்சிபி மகளிரணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ‘இதயம் உடைந்துவிட்டது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பி... மேலும் பார்க்க